Sunday 20 February 2011

இன்சோம்னியா - ஆங்கிலத் திரைப்பட விமர்சனம்



இன்சோம்னியா - இத்திரைப்படம் கிரிஷ்டோபர் நோலன் அவர்களால் 2002ல் இயக்கப்பட்டது. அவரின் நான்-லினியர் திரைப்பட பாணி இதில் கையாளப்படவில்லை. ஒரு வேலை, இத்திரைப்படம் நார்விய திரைப்படத்தின் தழுவழில் எடுக்கப்பட்டது ஒரு காரணமாக இருக்கலாம். நோலனின் திரைபபடங்கள் பொதுவாக மிகவும் வேகமாக அதே நேரத்தில் மிகவும் ஆழமான உணர்வுகளை துல்லியமாக பதிவு  செய்யக் கூடியது.  இத்திரைப்படத்தில் வேகம் மட்டும் கொஞ்சம் குறைவு. இதில் அல் ப்ச்னோ, ராபின் வில்லியம்ஸ் மற்றும் ஹிலாரி ஸ்வாங் முதன்மையான கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து உள்ளனர்

திரைப்படம், வில் டோமர் (அல் ப்ச்னோ) ஹாப் எக்கார்டுடன் (மார்டின் டானோமன்) விமானத்தில் அலாஸ்காவில் உள்ள சிறிய கிராமத்திற்கு பிரயாநிப்பதாகத் துவங்குகிறது. அக்கிராமத்தில் கே கானல் (கிரிஷ்டல் லாவே) என்ற பதிநேழு வயதான பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலைகாரனை கண்டுப்பிடிக்கும் பொறுப்பில் வில் டோமர் வரவழைப்பதற்கு வில் இதற்கு முன் இதே போன்ற பதின்ம வயது சிறுவன் கொலை வழக்கில் கொலை காரனை மிகவும் சாதுர்யமாக கண்டுபிடித்தது மிகப் பெரிய காரணமாக இருந்தது.  அவ்வழக்கிலும் ஹாப், வில்லுடன் பணி புரிந்துள்ளார். அவ்வழக்கில் வில், கொலை காரனை கண்டு பிடித்த போதிலும் சரியான தடயம் இல்லாத காரணத்தினால் அவனை வசமாக பிடிக்க இயலாததினால் தடயத்தை கொலை காரனின் வீட்டில் பதித்து சட்டத்தின் முன் மாட்ட வைத்திருப்பது ஹாப்க்கு தெரியும்.  இன்டெர்னல் அஃப்ர்ஷ் (Internal Affairs), வில் வழக்குகளை துலக்குவதில் வழி முறைகள் சரியாக பின்பற்றவில்லை என்று அவர் மேல் விசாரணையில் இறங்கியிருந்தது. இதில் ஹாப் இன்டெர்னல் அஃப்ர்ஷ்க்கு சிறுவன் கொலை வழக்கில் வில் செய்த தவறான தடய பரிமாற்றத்தை சொல்லி தன் பதவியையும் தன் வருமானத்தையும் காப்பாற்றிக் கொள்ள போவதாக வில்லிடம் சொல்லியிருந்தான்.

வில்லுக்கு உதவியாக எல்லி பர் (ஹிலாரி ஸ்வாங்) என்ற பெண் துப்பறிவு நிபுணர் நியமிக்கப்படுகிறாள். எல்லி தன் படிப்பில் ஆராயிச்சிக்கு வில் பங்கேற்ற வழக்குகளை பற்றி ஆராய்ந்ததில் அவரின் மீது மிகப் பெரிய அபிமானம் கொண்டிருந்தாள். எல்லி பர் கொலையான கே கானலின் உடலையும், மற்ற துப்புகளையும் வில்லுக்கு கொடுத்து விளக்குகிறாள். கே கொலையாவதற்கு முன் தன் காதலனுடன் சண்டையிட்டதும் அதற்கு முன்னர் பல முறை கேயின் காதலன் ராண்டி அவளை அடித்திருப்பதையும் வில் அறிய உடனே ராண்டியை விசாரிக்க வில் அவன் படிக்கும் பள்ளிக்கு செல்கிறார். 

விசாரணையில் ராண்டி கே இன்னொருவனுடன் பழகிய காரணத்திற்க்காக அடித்ததாகவும் அந்த இன்னொருவன் யாரென்று தனக்கு தெரியாது என்றும் கூறுகிறான். அதே சமயத்தில் கே கானலின் பள்ளி பையை பார்த்ததாக காவல் துறைக்கு யாரோ ஒருவரால் தெரிவிக்கப்படுகிறது. பள்ளி பையை ஆராயிந்ததில் ஒரு துப்பும் கிடைக்கவில்லை என்கிற சமயத்தில் வில் அந்தப் பையினை மறுபடியும் அதே இடத்தில் வைத்துவிட்டு கே கானலின் பையை துலாவுமாறு அனைத்து ஒலி பரப்பியிலும் (Wireless Radio) அறிவிக்குமாறு ஆணையிடுகிறார். 

கே கானலின் பள்ளி பையை வைத்த இடத்தை சுற்றி வில், எல்லி, ஹாப்  மற்றும் அனைத்து காவலர்களும் மறைந்து நின்று கொலைகாரன் வருகிறானா என கவனித்து கொண்டு இருந்தனர். சரியாக முன்னிரவுப் பொழிதில் ஒருவன் அந்த கடற்கரையை ஒட்டிய அந்த பாழடைந்த மர வீட்டிலினுள் செல்ல அவனை பிடிக்கும் நோக்கத்தில் வில் மற்றும் அனைவரும் அவனை துரத்தி செல்கின்றனர்.  அவன் பனி படர்ந்த பாறை இடுக்குகளில் மறைகிறான். பின் துரத்தி சென்ற வில் பனியில் ஒருவன் ஓடுவதை கண்டு தன் துப்பபாக்கி கொண்டு சுடுகிறார். பனியில் துப்பபாக்கி உறைந்து இயங்கவில்லை. உடனே தனது மாற்று துப்பபாக்கியால் (Backup Gun) அவனை நோக்கி சுடும் தருணம் ஓடுபவன் திரும்ப அவன் ஹாப் என வில்லுக்கு தெரிந்தபோதிலும் அவனை நோக்கி சுடுகிறார். 

வில் மற்றவர்க்கு பையினை எடுக்க வந்த கொலைகாரன் ஹாப்பை சுட்டு விட்டு ஓடியதாக சொல்லி தன் கொலையினை மறைக்கிறார். ஆனால் ஓடிய கொலைகாரன் ஒரு உள்ளூர் நாவல் ஆசிரியன் என்றும் அவனது பெயர் வால்டர் பிஃஞ் (ராபின் வில்லியம்ஸ்) மற்றும் கே கானல் அவனுடைய பரம வாசுகி என்றும் வில் கண்டுபிடிக்கும் அதே தருணத்தில் வில்லை ராபர்ட் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் வில் செய்த கொலையினை பார்த்ததாக கூறி தன்னை கே கானல் கொலையில் காப்பாற்றினால் தான் பார்த்த உண்மையினை வெளியில் சொல்ல மாட்டேன் என ஒருவாறு மிரட்டுகிறான். 

இறுதியில், வில் மற்றும் ராபர்ட் இருவரும் தங்களை காப்பாற்றிக் கொள்கிறார்களா அல்லது இருவரும் ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்து வில் தன் முப்பது வருட பணியில் கிடைத்த நற்பெயரை தவற விடுகிறாரா என நாம் எண்ணி கொண்டு இருக்கும் வேளையில் முற்றிலும் எதிர்பார்க்காத முடிவுடன் திரைப்படம் நிறைவடைகிறது. 

நோலனின் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் பொதுவாக முற்றிலும் நல்லவர்களாகவோ அல்லது முற்றிலும் கெட்டவர்களாகவோ இல்லாது சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தவறு செய்பவர்களாக இருக்கும். இத்திரைப்படமும் அதற்கு விதி விலக்கல்ல. இதில் தவறு செய்தவனின் மனப் போராட்டங்களை அல் ப்ச்னோ கதாபாத்திரத்தின் மூலம் அருமையாக வெளிக்கொணர்கிறார்.

அல் ப்ச்னோ மற்றும் ராபின் வில்லியம்ஸ் கதாபத்திரங்களுக்கிடையே நடக்கும் உரையாடல்கள் மிகவும் நேர்த்தியாகவும், ஆழ்ந்த அர்த்தம் பொதிந்ததாகவும் உள்ளது. மனிதன் தன நற்பெயரை காப்பாற்றி கொள்ள தன் சக மனிதனையும் கொலை செய்ய துணிவான் என்பதை அல் ப்ச்னோ கதாபத்திரம் மூலம் காட்டும் அதே நேரத்தில் பொருந்தா காதலின் விளைவுகளை ராபின் வில்லியம்ஸ் மூலம் இத்திரைப்படம் எடுத்துரைக்கிறது.

மனித மனப் போராட்டங்களை பெரும்பாலும் தன் மூல கதையாக எடுத்து நோலன் தன் திரைப்படங்களை இயக்குகிறார். நோலன் திரைப்படங்களிலே இன்சோம்னியா மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட திரைப்படம். தன்னுடைய சிங்னேச்சர் நான்-லீனியர் திரைக்கதைகளினால் அனைவரின் பாராட்டை பெற்ற நோலன் இத்திரைப்படத்திலும் ஒரு வேளை அதே பாணியினை கையாண்டிருந்தால் இதுவும் மிகவும் பேசப்பட்டிருக்கும் என்றே தோன்றுகிறது.

இன்சோம்னியா - இரு மனிதர்களின் வேட்கை போர்.

0 comments:

Post a Comment

எங்களைப் பற்றி

My photo
உலகம்
உலக சினிமா உங்களின் பார்வையில்

Followers

 
அயல் திரை. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.